அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார்.
இதற்கு முன்னரே டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கையில் ஊடக பேச்சாளராகவும் வெள்ளை மாளிகையில் உதவி ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், 27 வயதான கரோலின் லீவிட் அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகைக்கு நியமிக்கப்பட்ட முதல் இளம் ஊடக செயலாளராவார்.
மேலும் டொனால்ட் ட்ரம்ப், கரோலின் லீவிட் பற்றி கூறுகையில், “கரோலின் புத்திசாலி, திடமானவர், மிகவும் திறமையான செய்தி தொடர்பாளர் என்பதை நிரூபித்துள்ளார்” என்பதையும் தெரிவித்துள்ளார்.