சுற்றாடலில் அதிகரித்து வரும் மாசு காரணமாக மீன்கள் அழிவுக்குள்ளாக்குகின்றன. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடல்களில் சேருவதால் கடல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதந்தோறும் 8 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேருவதால் கடல் வாழ் உயிரினங்களும் அரிய வகை தாவரங்களும் அழிவு நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கடல் நீரில் கரையாது மாறாக மிதக்கின்றன, இதனால் மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் உணவாக அதை எடுத்துக் கொள்வதன் காரணமாக அவை அழிவுக்குள்ளாக்குகின்ற.
இந்த மாசுபாட்டினால் தண்ணீர் தரமும் குறைந்து, கடல் சூழலுக்கான முக்கியமான பாரம்பரிய வரம்புகளும் பாதிக்கப்படுகின்றதாக சுழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.