பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் அங்கு நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சில குலுங்கி சரிந்துள்ளன. அதேபோல இரவு 11 மணிக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.