நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,000 மேற்ப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் சுமார் 3,900 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலப்பரப்புகள் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அத்துடன் சிறியளவிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.