பெரும் போகத்திற்கான உர மானியங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 129,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு உர மானியம், பயிர்ச்செய்கை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதன் அடிப்படையில் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.