இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்திருக்கும் விடுதலை பாகம் 2 இத்திரைப்படத்திற்க்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்திலுருந்து “தினம் தினமும்” என்ற பாடல் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலர் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.