நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதி இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை காவல்துறைக்கு உட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு உட்பட்ட வீதியும் முற்றாக நீரில் மூழ்கி காணப்பட்டது.
இந்நிலையில், இன்று ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியும் எனவும் காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.