ரஷ்ய தளபதியின் படுகொலை! பதிலடி அளித்த புடின்

ரஷ்ய தளபதியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில்
உக்ரைன் மீது அதிபயங்கர ஏவுகணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏனைய பல மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதோடு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், இந்தத் தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்.

மேலும்
அவருடன் இருந்த இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் துணை அதிகாரி ஒருவரும் இந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கீவ் நகரில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு குடியிருப்பு வளாகங்களுக்குள் தீ பரவியுள்ளது.

இந்நிலையில், 630 குடியிருப்பு கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெப்பமூட்ட முடியாமல் உள்ளனர்.

 

Related News

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் –

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை…

Read More
நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள பொலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலிகானின் வீட்டினுள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையிட சென்ற நபரொருவருக்கும் சைஃப் அலிகானிற்கும் இடையில் நடந்த சண்டையில் சைஃப் அலிகான் கத்திகுத்திற்கு இலக்காகியுள்ளார். மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!