யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே மின்சாரம் தாக்கி பசு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.

யாழின் பிரதான பகுதியிலுள்ள மின் விளக்கினை சுற்றி கொடிவகை தாவரம் ஒன்று மின்சார கம்பிகளில் சுற்றிப்பரவி உள்ளது.

இதனைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் கவனிக்காமல்  இருந்த  நிலையில் நேற்று மின்ஒழுக்கினூடாக கொடி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதன்போது எதேர்ச்சியாக குறித்த கொடியினை உணவாக உட்கொள்ள விளைந்த பசு மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனை அவதானித்த குறித்த வீதியால் பயணித்தவர்கள் மற்றும் அருகில் இருந்த கால்நடை மருத்துவர்கள் என பலரும் குறித்த பசுவை காப்பாற்ற முற்பட்டனர்.

பசுவின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தமையினாலும் வீதியில் மழைநீர் தேங்கி நின்றமையினாலும் பசுவை காப்பாற்ற
முனைந்தவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

எனவே அவர்கள் பசுவினை காக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்க நேரிட்டது.

இது தினமும் பலரும் பயன்படுத்தும் பாதை என்பதனால் பசுவின் நிலை எவருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் பசுவின் உயிர்பறிக்கப்பட்டமைக்கு உரிய அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்து பொதுமக்களும் அவ் வீதியால் பயணித்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மின்சார சபையினர் மின்னை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டர்கள் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் மின்சார அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மின்சாரசபையினர் தாம் பொறுப்பல்ல வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் யாழ்.மாநகர சபையே இதற்கு பொறுப்பு.

தாம் துரித சேவை இலக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனவும் எனவே தம்மால் ஒரே பகுதியில் அதிக நேரம் தரித்திருக்க முடியாது எனவும் தெரிவித்த மின்சாரசபை அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து விலகினர்.

எந்த அதிகாரிகளும் குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காத நிலையில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள குறித்த பசுவின் உரிமையாளர் தீர்மானித்தார்.

அசம்பாவிதங்கள் நடந்த பிறகு நடவடிக்கைகள் எடுக்காது இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

 

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!