மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் இன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சாத்திகள் எவரும்
பாதிக்கப்படவில்லை எனவும், பரீட்சார்த்திகளுக்கு தேவையான வாகன வசதிகள் ஒவ்வொரு மாவட்டச் செயலகத்தாலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.