“போர் நிறுத்தம் செய்ய தயார்…ஆனால்” – ஒரே ஒரு கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்…!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வந்த நிலையில், இப்போது அவரது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காசா மக்கள் உதவிகளைப் பெறவும் பிணையக் கைதிகள் வெளியேறும் வகையிலும் சிறிய நேரத்திற்குப் போர் நிறுத்தம் செய்வது குறித்து இஸ்ரேல் பரிசீலனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போதிலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாகச் சர்வதேச செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த நெதன்யாகு…

காசாவில் உள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களை முழுமையாக அழிப்பது தான் எங்கள் நோக்கம். பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு தேவை. போர் முடிந்தாலும் கூட அதன் பிறகும் பாதுகாப்பு தேவை என்றே கருதுகிறேன்.

இங்கே உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. உதவி பொருட்களைச் சென்றடைய அவ்வப்போது ஓரிரு மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும்.

பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியே வரவும் இது போன்ற போர் நிறுத்தங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், முழு வீச்சில் போர் நிறுத்தம் என்பதில் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அது எங்கள் போர் யுக்தியை பாதிக்கும் என்றார்.

Related News

தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர் . இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு…

Read More
அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானி 250 மில்லியன் டொலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. மேலும் தனது மீள்சக்தி நிறுவனத்திற்கு அனுமதியை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானியும் அவரது சிரேஸ்ட அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்க முயன்றனர் என அமெரிக்கா…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு  வழங்கி வரும் சீனா!

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!