பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டை சீரழித்து அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்வடையும் வரையில் காத்திருந்தவர்கள் தற்பொழுது அரிசி, முட்டை மற்றும் தேங்காய் விலை எவ்வளவு என கேட்கிறார்கள்.
மக்கள் இந்தப் பிரச்சினை குறித்து பதற்றமடைய மாட்டார்கள்.
அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அரசாங்கத்தை திட்டவில்லை எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.