![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2024/12/kaidhu-1.jpg)
களுத்துறை, பேருவளை, வளதார பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் பேருவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிசார்
மேற்கொண்டு வருகின்றனர்.