பத்தாவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கும் மூன்று நாள் செயலமர்வு வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் விவகாரங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (நவம்பர் 16) வெளியிடப்படும்.
புதிய உறுப்பினர்களை பதிவு செய்யும் செயல்முறை நாளை (நவம்பர் 17) ஆரம்பமாக உள்ளது, எனவே 18 தொடக்கம் 22 வரையான பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் நவம்பர் 21 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.