பங்களாதேஷ் மருந்துக் கைத்தொழில் சங்கத்தினால் இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள மருத்துவ நன்கொடைகள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது.
பல ஆண்டுகளாக நாம் உலகம் முழுவதிலுமிருந்து மருந்துகளை அனுப்பியுள்ளோம். விமானம் மூலம் சரியான நேரத்தில் மருந்துகள் விநியோகம் செய்வதன் மூலம் மருந்துகளை இலங்கையில் கிடைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவர் சமிந்த பெரேரா கூறினார்.
இந்த மருந்துகள் டாக்காவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 190 விமானத்தில் கடந்த நவம்பர் 4 அன்று கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது. பங்களாதேஷால் வழங்கிய மருந்துகள் பெக்சிம்கோ பார்மா, ஸ்கொயர், இன்செப்டா, ரெனாட்டா, யூனிமெட் யுனிஹெல்த், ஹெல்த்கேர், பீக்கான், ஆக்மி, சினோவியா பார்மா மற்றும் நுவிஸ்டா பார்மா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.
இந்த மருத்துவ உதவி குறித்து பங்களாதேஷ் மருந்துத் தொழில்துறை சங்கத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் கருத்துத் தெரிவிக்கையில்,
பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை நாம் மதிக்கின்றோம், இலங்கையின் சுகாதார துறையை வலுப்படுத்த எமது உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.