மன்னார் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இதுவரையில் 6 விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை மொத்தம் 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவாகின, இது மொத்த வாக்குகளின் 24 வீதமாகும்.
மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து இன்றுவரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், அவற்றில் இன்றைய தினத்தில் வந்த 6 முறைப்பாடுகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.