தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்
.
இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது.

முத்துராஜா நீண்ட தந்தங்களை கொண்டுள்ளமையினால் அதன் நாளாந்த செயற்பாடுகள் பாதிப்புள்ளாகுவதன் காரணமாகவே அதன் தந்தங்களை வெட்ட கால் நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது தந்தங்கள் தரையில் சிக்கி இழுக்கப்படுவதைத் தடுக்க அதன் தலையை தூக்கவேண்டியுள்ளதால் முத்துராஜா பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

2001ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகளில் முத்துராஜாவும் ஒன்றாகும்.

இருப்பினும் இலங்கையில் முத்துராஜா இரண்டு தசாப்தங்களாக மத நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இவ் விடயம் தொடர்பில் கால்நடை வைத்தியர் வாரங்கனா லங்காபின் தெரிவிக்கையில்,

யானையின் தந்தங்களின் எடையைக் குறைப்பது தொடர்பில் நிபுணர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்று வந்தாலும் எந்தவொரு தீர்மானத்தையும் முன்னெடுக்க பல அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் அனுமதி தேவைப்படும்.

ப்ளாய் சாக் சுரின் யானையின் முன் இடதுகாலில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • aabidamaan

    Related News

    அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

    இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானி 250 மில்லியன் டொலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. மேலும் தனது மீள்சக்தி நிறுவனத்திற்கு அனுமதியை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானியும் அவரது சிரேஸ்ட அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்க முயன்றனர் என அமெரிக்கா…

    Read More
    அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது முதல் தடவை தாக்குதலை மேற்கொண்ட உக்ரைன்!

    உக்ரைன் ரஸ்யா மீதான முதல் தடவை தாக்குதலை அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் அனுமதியை பெற்ற மறுநாள் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைன் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!

    பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!

    போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

    போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

    தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

    தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

    பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

    பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு  வழங்கி வரும் சீனா!

    இன்றைய வானிலை அறிக்கை!

    இன்றைய வானிலை அறிக்கை!

    தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

    தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!