தபால் சேவை ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம்…!!

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என அதன் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நவம்பர் 8, 9, 10 ஆகிய 3 நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட தபால் மா அதிபர், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான எந்தவொரு தபால் நிலையமும் மூடப்படாது எனவும், மேலும் நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் பயனுள்ள முதலீட்டு வாய்ப்பு, அதனை நடத்துவதற்கு பொருத்தமான கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாகவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.

Related News

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சீன அரசாங்கம் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாளைய தினம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். மேலும் பொது மக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு  வழங்கி வரும் சீனா!

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!