சென்னை: சென்னையில் தார் சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் இருசக்கர வாகனம் சறுக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் பல்வேறு சாலைகளில் பள்ளம் அதிகமாக காணப்படுகிறது.. சாலைகளில் உள்ள பள்ளம் காரணமாக விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது..ஆனால் நடவடிக்கை என்பதோ ஆமை வேகத்தில் தான் எடுக்கப்படுவதாக புகார்கள் உள்ளது.
ஒரு சாலையில் பள்ளம் ஏற்பட்டால் அதில் யாராவது விபத்தில் சிக்கிய பிறகே நடவடிக்கை என்பது எடுக்கப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகளும் உள்ளது. இதனிடைய வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக போடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் போடப்படும் அதே நேரத்தில், சேதமடைந்த சாலைகள் பேட்ஜ் ஒர்க் செய்யப்படுகிறது.
சென்னை தங்கசாலை பெருமாள் கோயில் சந்திப்பில் சாலை பேட்ஜ் ஒர்க் செய்யும் பணி அண்மையில் நடந்துள்ளது. சாலைகளில் பேட்ஜ் ஒர்க்கிற்காக சிமெண்ட் பேட்ச் போடப்பட்டிருந்தது.. இந்நிலையில் இன்று காலை உத்தரகண்டைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் (27) இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய அண்மையில் போடப்பட்ட சிமெண்ட பேச்சில் சறுக்கி விழுந்தார்.
இதனால் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். பிரவீன் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் சாலை பணிகள் முடிக்கப்பட்டிந்தால் அவர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.