நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இவ்வருடம் கா.போ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சாத்திகள் தங்களது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.
மாற்று பரீட்சை நிலையங்களை அணுகவேண்டிய நிலைமை ஏற்பட்டால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.