தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்து ரயில் முனையத்திற்கு சென்ற போதே தடம்புரண்டுள்ளதாக ரயிர்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் தடம் புரண்டதையடுத்து, கடரையோ ரயில் சேவை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரயிலை ரயில்வே ஊழியர்கள் மீள் தடமேற்றியுள்ளதுடன், இன்று காலை வரை ஒரு ரயில் மார்க்கத்தின் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயிர்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் ஒரு ரயில் மார்க்கத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.