கரூர் திமுக மேயர் 3 மாதத்தில் ஜெயிலுக்கு போவது உறுதி – சத்தியம் செய்த அண்ணாமலை..!!

தமிழ்நாடு

என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தனது சொந்த மாவட்டமான கரூரில் பாதயாத்திரை நடத்திய அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது, கரூர் மேயர் கவிதாவை ரவுடிக் கும்பலுக்கு தலைவி என்றும் வருமான வரித்துறைத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கிலிருந்து கவிதா ஒரு போதும் தப்ப முடியாது எனவும் அண்ணாமலை காட்டமாக எச்சரித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முதல் குற்றவாளியே கரூர் மேயர் கவிதா தான் என்றும் தாங்கள் பெட்டிஷன் போடவுள்ளதாகவும் மேயர் கவிதா எங்கே தப்பித்துச் செல்கிறார் என பார்த்துவிடுகிறோம் எனவும் அனல் கக்கினார் அண்ணாமலை.

செந்தில்பாலாஜியே இன்னும் உள்ளே தான் இருக்கிறார் என்றும் அவரை விட கரூர் மேயர் கவிதா என்ன பெரிய ஆளா என வினவிய அண்ணாமலை, இன்னும் ஒரு மாதம், இரண்டு மாதம் வேண்டுமானால் ஆகலாம் ஆனால் மூன்று மாதத்தில் உள்ளே செல்வது உறுதி என அடித்துக் கூறினார்.

மத்திய அரசு அதிகாரிகள் மீது கை வைத்திருக்கிறீர்கள் அது சிபிஐ விசாரணைக்கு போகாதா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கரூர் மேயர் கவிதா எங்கேயும் தப்பி ஓட முடியாது என சவால் விடுத்தார். கரூர் மேயர் கவிதா வெளியே இருக்கும் வரை சந்தோஷமாக இருந்துக் கொள்ளட்டும் என்றும் அதுவரை பாஜகவின் ப்ளக்ஸ் பேனர்களை கிழிப்பது, போஸ்டர்களை கிழிப்பது போன்ற பணிகளை பார்த்துக்கொள்ளட்டும் எனவும் உள்ளே சென்றுவிட்டால் இதை செய்ய முடியாது எனவும் கலாய்த்தார்.

ரொம்ப ஆடக்கூடாது என்றும் ஆடியவர்கள் எல்லாமே இன்று உள்ளே இருக்கிறார்கள் எனவும் கூறிய அண்ணாமலை, நடப்பதை எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். கரூரில் இல்லாத கெட்டப்பழக்கம் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மது கலாச்சாரம், போதை கலாச்சாரம் கரூருக்கு வந்துவிட்டதாகவும் இதனை தடுக்க வேண்டியவர்கள் தடுக்கத் தவறிவிட்டதாகவும் சாடினார்.

Related News

இறுதி தீர்ப்பு இறைவன் கையில் – மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்…!!!

தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த…

Read More
நாங்கள் வீடு வீடாக சென்று குடிக்க சொல்கிறோமா? – அண்ணாமலையை காட்டமாக விமர்சித்த அமைச்சர் முத்துசாமி…!!

தமிழ்நாடு தமிழ்நாட்டில் மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் முத்துசாமியிடம் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி ஏழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது… அண்ணாமலை…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா!