கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலின் சர்வதேச கடற்பகுதியில் சீனப் போர் விமானம் தங்களது ராணுவ ஹெலிகாப்டர் மீது தீப்பொறிகளை வீசி தாக்குதலுக்கு முயன்றதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்எம்சிஎஸ் ஒட்டாவாவின் ராயல் கனடா கடற்படை போர்க்கப்பலின் விமான அதிகாரி மேஜர் ராப் மில்லன், இந்த பொறுப்பற்ற செயல் விமானத்தை வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார்.
சீனாவின் ஜே 11 ரக போர் விமானம், தங்களது ஃபரைகேட் சிகோர்ஸ்கை ஹெலிகாப்டர் அருகே நெருங்கி தாக்குதல் ஏற்படுத்தும் விதமாக வந்ததாக கனடா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இந்த செயல் மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியிருக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது 200 அடி கனடா ஹெலிகாப்டர் விலகி சென்று மோதலை தவிர்த்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் கனடா – சீனா நாடுகளுக்கு இடையே இரண்டாவது முறையாக விமான மோதல் நிகழ்ந்துள்ளது. தென் சீன கடற்பரப்பில் 1.3 மில்லியன் சதுர மைல் அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதில் சிறிய மணல் திட்டுக்கள், பாறைகளை உருவாக்கி ஆயுதம் கொண்ட தீவுகளாக மாற்றியுள்ளது. சீனா உரிமை கோரும் பகுதி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக பாதையாக அமைந்துள்ளது. இதற்கிடையே தைவான் ஜலசந்தி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கனடா, அமெரிக்காவின் போர்க்கப்பல் நவம்பர் 1ஆம் திகதி தைவான் ஜலசந்தி பகுதியில் சென்றதால் சீனா தரப்பில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.