அம்பாறை – காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிந்தவூர் பகுதியில் உள்ள மதரசா பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த உழவு வண்டியில் 11 சிறுவர்கள் பயணித்த நிலையில் அவர்களில் 5 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 மற்றும் 16 வயதுக்குற்பட்ட 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதேநேரம் குறித்த உழவு வண்டியில் சாரதி மற்றும் உதவியாளர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் கடற்படையினர் , காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து காணாமல் போயுள்ள சிறுவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.