வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் காரணமாக, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றய வானிலை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
மேலும், மத்திய, சப்ரகமுவ, தென், மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டமும் காணப்படும்.
மன்னார் முதல் திருகோணமலை வரையிலான கடல் பிராந்தியங்கள் உட்பட கடல்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான முறையில் செயற்படவும், கடல் பகுதியில் மிதமான அலைகள் இருப்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்வின்போது கடல்பகுதிகள் கொந்தளிப்பாகும் என அவர் கூறியுள்ளார்.