நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்பு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் பதுளை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
காலை நேரத்தில் மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படலாம்.
மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு வரையான கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் இருக்கும். மழை நேரங்களில் கடல் பகுதிகள் கொந்தளிப்பு நிலை ஏற்படும் என்பதால் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.