இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வரை உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
சூழல்: கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20-30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். குறிப்பாக காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.
பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும்: பலத்த காற்று, மின்னல் தாக்கம், மற்றும் கடல் கொந்தளிப்பு போன்ற சூழ்நிலைகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறான வானிலை மாற்றங்களுக்கிடையில், கடல் பிராந்தியங்களிலும் மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.