இதே வேலையா போச்சு; நீதிபதி முதல் சாமானியன் வரை தரக்குறைவாக பேசுறாரு ஆர்.எஸ்.பாரதி – வானதி விளாசல்..!!

தமிழ்நாடு

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருவதோடு, திராவிட கொள்கைக்கு எதிரான வகையிலும் ஆளுநர் கருத்து தெரிவித்து வருவதால் ஆளுநர் மற்றும் திமுக அரசு இடையே மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, “ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். வேண்டுமென்றே தமிழக அரசை வம்புக்கு இழுக்கிறார். ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். யாரும் தப்பா நினைத்துக்கொள்ள வேண்டாம். நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே சுரணையுடன் ரவியை துரத்தி, அந்த மாநிலத்தை விட்டு ஓட ஓட விரட்டினார்கள். அப்படியென்றால் உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்த அளவு சொரணை இருக்க வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவினர் தொடர்ந்து மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார். ஆளுநர் ஆர்.என் ரவியை விமர்சனம் செய்வதாக கூறி ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள் என கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு மாநில மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.பாரதியை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் வரவேற்கிறார்களா? இல்லை என்றால் இன்னும் அவரை கண்டிக்காதது ஏன்?” என தெரிவித்துள்ளார்.

Related News

ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

இந்திய கடற்படைக்கு இந்திய ரூபா 2,960 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகள் வாங்குவதற்கு இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. புதிய ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. கப்பலில்…

Read More
யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!