அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனர், இன்றிலிருந்து (நவம்பர் 12) நவம்பர் 15 வரை இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்த விஜயம், தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், குடியுரிமை பங்கேற்பு, இளையோர் தலைமைத்துவம், கலாச்சாரப் பாதுகாப்பு, மற்றும் சமூக நெகிழ்வுத்தன்மை போன்ற முக்கிய பிரச்சினைகளை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இலங்கையில், அமெரிக்க தூதரகம் மற்றும் உள்ளூர் துறைகளுடன் இணைந்து, இளம் தலைவர்களை கல்வி, தலைமைத்துவம், மற்றும் குடியுரிமை பங்கேற்பு போன்ற துறைகளில் ஊக்குவிக்கும் திட்டங்களின் தாக்கத்தை சிறப்பு தூதர் அபி பின்கெனர் பார்வையிடுவார். மேலும், அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் சிறப்பு தூதர் பின்கெனர் இணைந்து, அமெரிக்க தூதரகத்தின் இளையோர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் யுஎஸ்எய்ட் ஆதரவிலான எமெர்ஜிங் லீடர்ஸ் அகாடமி முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடுவார்கள்.
நேபாளில், அபி பின்கெனர் அங்குள்ள இளம் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, இளையோர் தலைமைத்துவத்தில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றியும் ஆலோசிப்பார்.