இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானி 250 மில்லியன் டொலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
மேலும் தனது மீள்சக்தி நிறுவனத்திற்கு அனுமதியை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானியும் அவரது சிரேஸ்ட அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்க முயன்றனர் என அமெரிக்கா தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் இதுவரை இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்கவில்லை.
2023 இல் மிகபிரபலமான நிறுவனமொன்று அதானி நிறுவனத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அதானி இதனை நிராகரித்திருந்தார்.
அதானி குழுமத்தின் இலஞ்ச ஊழல் நடவடிக்கை குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பல மாதங்களாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்ததிலிருந்து பல தடைகளை எதிர்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.