![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2024/12/gun-shoot-1.jpg)
ஜா-எல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும்
காயம் ஏற்படவில்லை என்றும் குறித்த வீட்டின் பிரதான நுழை வாயில் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் , கடந்த 15ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.