சட்டவிரோதமாக வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 08 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க, ஆடிஅம்பலம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பங்களாதேஷ் பிரஜைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் ஆவர்.
மேலும் சந்தேக நபர்கள் மினுவாங்கொடை நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (19) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.