ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த, சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஓயாமடுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது .