இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக சுமார் 290 கிலோமீற்றருக்கும் , திருகோணமலையில் இருந்து சுமார் 410 கிலோமீற்றருக்கும் தொலைவில் தாழமுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்ததாக வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காற்றுடன் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வங்காள விரிகுடாவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றராக அதிகரித்ததும் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • Related News

    இலங்கை மத்திய வங்கியின் பெயரில் பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

    மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என கூறி, தற்போது ஒன்லைனில் ஒரு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பரத்தில், வீட்டிலிருந்து பணியாற்றிய ஸ்மார்ட்போன் அல்லது கணினி மட்டுமே தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு…

    Read More
    மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர அரசாங்கத்தின் ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்!

    ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    இலங்கை மத்திய வங்கியின் பெயரில் பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

    இலங்கை மத்திய வங்கியின் பெயரில் பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

    பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

    பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால்  சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

    மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர அரசாங்கத்தின் ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்!

    மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர அரசாங்கத்தின் ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்!

    நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

    நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

    அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டு தீ பரவியமைனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்!

    அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டு தீ பரவியமைனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்!

    ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே முதலாவது இலக்கு தலதா அதுகோரள கருத்து!

    ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே முதலாவது இலக்கு தலதா அதுகோரள கருத்து!