2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை உலக கிரிக்கெட் அரங்கில் இலங்கையின் வீரர் ஒருவர் பெற்றுள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20இற்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரேரா இந்த சதத்தை பெற்றுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20இற்கு 20 போட்டி இன்று செக்சன் ஓவலில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில், குசல் பெரேரா 46 பந்துகளை எதிர்கொண்டு 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதுவே 2025ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் பெறப்பட்ட முதல் சதமாக கருதப்படுகிறது.
சரித் அகலங்க 46 ஓட்டங்களை பெற்றார். இந்தநிலையில் நியூஸிலாந்து அணி 219 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட 20இற்கு 20 தொடரில் ஏற்கனவே நியூஸிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.