19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி10 கிரிக்கெட் 2ஆவது போட்டியிலும் பங்களாதேஷை வெற்றிபெற்றது இலங்கை!

தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இளையோர் ரி20 கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 4 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

இரண்டாவது போட்டியில் அணித் தலைவி மனுதி; நாணயக்கார குவித்த அரைச் சதம், சமோதி ப்ரபோதா முனசிங்க, அசேனி தலகுனே, லிமன்சா திலக்கரட்ன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கை இளையோர் (மகளிர்) அணியை வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை பெற்றிருந்தது.

தஹாமி செனெத்மா, மனுதி நாணயக்கார ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

தஹாமி செனெத்மா 25 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து மனுதி நாணயக்காரவும் ரஷ்மிக்கா செவ்வந்தியும் 3ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மனுதி நாணயக்கார 50 ஓட்டங்களைப் பெற்றார்.

ரஷ்மிக்கா செவ்வந்தி 27 ஓட்டங்களுடனும் சுமுது நிஸன்சலா 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நிஷித்தா அக்தர் நிஷி 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 12.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

சாதியா அக்தர் (18), பர்ஜானா ஈஸ்மின் 10 ஆ.இ. ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சமோதி ப்ரபோதா முனசிங்க 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசேனி தலகுனே 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related News

அறிமுக விருதுகள்!

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விருதுகள் அறிவிக்கப்பபட்டு வருகின்றன. அதன்படி சிறந்த அறிமுக வீரர் விருதை இலங்கை அணியின் வீரர் கமிந்து மென்டிஸ் வெற்றி பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டில் சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய நிலையில் சிறந்த அறிமுக வீரர்…

Read More
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள அவர், 25 சதங்களையும் பெற்றுள்ளார். இந்தநிலையில் அடுத்த மாதம் நடைபெறும்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!