லியோ படத்தில் பிடித்த சீன் – அட்லி பகிர்ந்த சுவாரஸ்யம்…!!!

லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகியா படம் லியோ. இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும்சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 580 கோடி ரூபாய்களை படத்தின் வசூல் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் விரைவில் படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ள லியோ படம் வெளிநாடுகளிலும் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

முன்னதாக விஜய்யின் தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ள அட்லி, தற்போது லியோ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியொன்றில், இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் படத்திற்கு படம் லோகேஷ் கனகராஜின் படமியக்கும் திறன் அதிகரித்து வருவதை தான் பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் காபி ஷாப் காட்சி தனக்கு மிகவும் பேவரிட் என்றும் கூறியுள்ளார். மேலும் லோகேஷின் படங்களின் வில்லன்கள் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றும் அவர் எப்போதுமே வழக்கமான ஃபார்மேட்டை உடைத்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related News

‘ ஜன நாயகன்’

தமிழகத்தில் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக அரசியலில் களமிறங்கி இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘விஜய் 69 ‘எனும் திரைப்படத்திற்கு ‘ ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டு, அதற்கான இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான…

Read More
நடிகர் கவினை இயக்கும் நடன இயக்குனர்!

நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!