லிபிய கடற்பகுதியில் படகிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளனர்.
லிபியா கடற்கரையிலிந்து 20 கிலோமீற்றர் தொலைவில் படகொன்றிலிருந்து விழுந்து 20 குடியேற்றவாசிகள் காணாமல் போயுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் கொந்தளிப்பான கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை லிபியாவின் ஜூவாரா துறைமுகத்திலிருந்து 27 பேருடன் படகொன்று புறப்பட்டதாகவும் இவர்களில் 20 பேர் படகிலிருந்து கடலில் விழுந்து காணாமல்போயுள்ளனர் ஏனைய ஏழுபேரும் பயணத்தை தொடர்ந்துள்ளனர் இறுதியாக இத்தாலியின் பொலிஸ் ரோந்து பிரிவினர் அந்த படகை லம்பெடுசா தீவில் கண்டுபிடித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
லிபியாவிலிருந்து புறப்பட்டு ஐந்து மணித்தியாலத்தில்படகிற்குள் தண்ணீர் வரத்தொடங்கியது படகு ஆடத்தொடங்கியது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளதுடன் பதற்றம் அச்சம் காரணமாக 20 பயணிகள் கடலில் விழுந்துள்ளனர் என உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.
கடலில் விழுந்தவர்களில் பெண்கள் சிறுவர்களும் இருந்தனர் இவர்கள் சிரியா எகிப்து சூடானை சேர்ந்தவர்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் மிகவும் கொந்தளிப்பாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளனர்.
உயிர்தப்பியவர்களில் சிரியாவை சேர்ந்த சிறுவனும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.