எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டமுறையை பேணுவதற்காக 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பொதுத் தேர்தலுக்காக 3,200 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 12,227 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்ட விதிகளைப் பேணவும் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மேலும் 269 வீதி தடைகளும் அமைக்கப்பட உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.