தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறி இறந்தனர் என்று மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்த சுமார் 30 உள்நோயாளிகளை வெளியேற்றிய பின்னரே இந்த 6 பேரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.