தற்போது சந்தையில் ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கால்நடை வைத்தியர்களால் சான்றளிக்கப்பட்ட இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த காலங்களில் பன்றியிறைச்சி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் கால்நடை பண்ணைகளின் உரிமையாளர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.