கொங்கோ குடியரசில் பரவிவருகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமென அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.