மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை, நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.