கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிசாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை ச பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு இது பயன்படுத்தப்படும் என அறியமுடிகிறது.
இது தொடர்பாக ஒன்ராறியோ மாகாண வீட்டுவசதி இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் அரசாங்கம் 75.5 மில்லியான் டொலர்களை முதலீடு செய்து வீடற்றவர்களின் நிலைமையைத் தடுப்பதற்கும், முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நியாயமான மாற்றுத் தங்குமிடத்திற்கான அணுகலை வழங்குவதற்கும் மேலும் முதலீடு செய்கிறது” என்றார்.
இது ஒவ்வொரு ஆண்டும் வீடற்றோர் தடுப்பு திட்டங்களில் மாகாணத்தின் தற்போதைய 700 மில்லியன் டொலர் முதலீட்டிற்கும், அத்துடன் வீடின்மை மற்றும் போதைக்கு அடிமையானோர் மீள்வாழ்வு மேம்பாட்டு இணைப்பு மையங்களுக்கான மாகாணம் முதலீடு 378 மில்லியனுக்கும் கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.