தமிழ்நாடு
மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த துறைக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். சாதிய கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் அடித்தளமான கருத்து. நீட் தேர்வுக்கும் சாதிய கொடுமைகளுக்கும் முடிச்சு போடுவது சரியல்ல. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று என்பதுதான் எங்களுடைய கருத்தாக உள்ளது என்றார்.
அப்போது அதிமுக மேல்முறையீட்டு மனு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ஓபிஎஸ் கூறுகையில் இறுதி தீர்ப்பு இறைவன் கையில் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் உயர்நீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக அதிமுக கரை வேட்டியை அணியாமல் வேறு சாதாரண வேட்டியை அணிந்திருந்தார். அது போல் முதல்முறையாக அவருடைய காரிலிருந்து அதிமுக கொடி அகற்றிவிட்டு பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.