வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல் மாகாணங்களின் சில இடங்களில் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் மேல் மழை ஏற்படலாம்.
காலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பனிமூட்டம் காணப்படும்.
மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை கடல் பிராந்தியங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பதிவாகும்.
மணித்தியாலத்திற்கு 15-30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் காற்று வீசும். சில இடங்களில் வேகம் 40-45 கிலோமீற்றராக அதிகரிக்கலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கடல் பிராந்தியங்களில் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.