இன்றைய வானிலை அறிக்கை!

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழையும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழையும் பெய்யக்கூடும். மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் எனவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • Related News

    கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

    கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கோட்டைக்கு இடையில் இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.30…

    Read More
    மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

    கண்டி பிரதேசத்தில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கண்டி பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கண்டி, தலதா…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    இலங்கை- இந்திய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி!

    இலங்கை- இந்திய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி!

    கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

    கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

    மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

    மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

    சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்!

    சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்!

    இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 5 ஊடகவியலாளர்கள்!

    இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 5 ஊடகவியலாளர்கள்!

    வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

    வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!