இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை தான் விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா அறிவித்துள்ளார்.
ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கும் இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளனர்.
இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் 3 தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்ய இருந்தனர்.
இது குறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தன்னுடைய மன கசப்புக்கள் மற்றும் பல சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது. மேலும் மிகுந்த வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.