ஆஸ்திரேலியாவில் ஹோட்டலின் திறந்தவெளி உணவருந்தும் பகுதியில் புகுந்த சொகுசு கார் – ஐந்து பேர் பலி..!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு . நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது . நேற்று மாலை இந்தப் பகுதியில் ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இந்த பகுதிக்குள் புகுந்தது.

இதில் ஒரு சிறுவன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். அப்போது காரை ஓட்டிவந்தது 68 வயது முதியவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

Related News

அவுஸ்திரேலியாவில் மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

காளான் சூப் சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண்ணை நேற்று கடந்த 2 ஆம் திகதி பொலிஸார் கைது…

Read More
ஆளே இல்லாமல் பறக்கும் பேய் விமானம் – ஆஸ்திரேலியாவை அலறவிடும் கத்தார் ஏர்வேஸ்..!!!

ஆஸ்திரேலியாவில் தினசரி காலை 5.55 மணிக்கு மெல்போர்ன் நகரில் இருந்து கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிட்டதட்ட காலியாக அடிலெய்டு நகருக்குச் செல்கிறது. 354 சீட் கொண்ட இந்த விமானத்தில் எப்போதும் 4, 5 பேர் மட்டுமே இருப்பார்கள். பொதுவாக…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

வேலணையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பூச்சி கொல்லிகளுடன் நால்வர் கைது!

வேலணையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பூச்சி கொல்லிகளுடன் நால்வர் கைது!

துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலி!

துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலி!

இஸ்ரேல் – ஹமாஸ் மீது நடத்திய அதிரடி தாக்குதல்!

இஸ்ரேல் – ஹமாஸ் மீது நடத்திய அதிரடி தாக்குதல்!

ஆபத்தான புளியம்பொக்கணை பாலம் தொடர்பாக ஆளுநர் கருத்து!

ஆபத்தான புளியம்பொக்கணை பாலம் தொடர்பாக ஆளுநர் கருத்து!

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

படல்கமவில் கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு!

படல்கமவில் கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு!