போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பேர்த் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவுள்ளதால் இத் தொடர் மக்கள் மத்தியிலும் விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.

இந்தப் போட்டியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அணித் தலைவர்களாக விளையாடுவது விசேட அம்சமாகும்.

தனது மனைவி இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதால் மனைவிக்கு துணையாக சில நாட்கள் இருக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியின் உப தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ராவிடம் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்ற ஜஸ்ப்ரிட் பும்ரா மேலும் கூறுகையில்,

‘தலைவராக அணியை வழிநடத்துவது பெருமை தரும் விடயம் ஆகும். இது ஒரு பாக்கியம். இதனை பதவி என்பதைவிட பொறுப்பாக எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்குப் போன்றே என்னிடமும் ஒரு தனி பாணி இருக்கிறது.

‘வேகப்பந்துவீச்சாளர்கள் அணித் தலைவர்களாக இருக்கவேண்டும் என நான் எப்போதும் வலியுறுத்திவந்துள்ளேன். அவர்களால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். அணித் தலைவராக பெட் கமின்ஸ் சிறப்பாக செயற்படுகிறார். கடந்த காலங்களில் கபில் தேவ் ஒரு வேகப்பந்துவீச்சாளராக தலைவர் பதவியை சிறப்பாக ஆற்றியிருந்தார். அவர்களது வரிசையில் எனது பயணத்தை நம்பிக்கையுடன் ஆரம்பிக்கவுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் கூறுகையில் தலைமைப் பதவி மூலம் கிடைத்த அனுபவங்கள் தன்னை ஒரு சிறந்த வீரராக பரிணமிக்கச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, 3ஆவது தடவையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதாக இருந்தால் இந்தத் தொடரில் குறைந்தது 3 போட்டிகளில் வெற்றிபெற்றாகவேண்டும்.

அதேவேளை, நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் என்ற வகையில் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்கை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கும்.

ஏனெனில் அவுஸ்திரேலியாவின் கடைசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் தொடர் இலங்கைக்கு எதிராக இலங்கையிலேயே நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் தங்களுக்கு இடையில் விளையாடியுள்ள 107 டெஸ்ட் போட்டிகளில் 45 – 32 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கின்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மற்றைய போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

  • Related News

    இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியை தொட்டது!

    நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அங்கு நடைபெற்ற தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்து பதினொருவர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியிலும் ஒரு ரி10 போட்டியிலும் இலங்கை வெற்றிபெற்றது. லின்கன் பல்கலைக்கழகம், பேர்ட் சட்க்ளிவ்…

    Read More
    சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்ட தகவல்!

    இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான 2024 – 2027ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைபெறும் போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ICC) தெரிவித்துள்ளது. இதில், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச்சில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஐசிசி…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

    கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

    கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க பெற்ற அதிர்ஷ்டம்!

    கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க  பெற்ற அதிர்ஷ்டம்!

    விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர் வெங்கடேஷ்சின் கருத்து !

    விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர்  வெங்கடேஷ்சின் கருத்து !

    சமந்தா மனதளவில் பட்ட கஷ்ட்டம்… ரகசியத்தை போட்டுடைத்த பாடகி சின்மயி!

    சமந்தா மனதளவில் பட்ட கஷ்ட்டம்… ரகசியத்தை போட்டுடைத்த பாடகி சின்மயி!

    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

    போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

    போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!